புதிய பொதுச்செயலாளர் யார் ? கூடுகிறது திமுகவின் பொதுக்குழு கூட்டம்

புதிய பொதுச் செயலாளர் தேர்வு தொடர்பாக திமுக  பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது.

புதிய பொதுச் செயலாளர் தேர்வு தொடர்பாக திமுக  பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது.

திமுகவின் பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள் பதவி வகித்த பேராசிரியர் க.அன்பழகன் காலமானதையடுத்து, திமுகவின் பொதுச்செயலாளர் பதவி தற்போது காலியாக இருந்தது . கட்சியின் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் பொதுச்செயலாளர் மூலமாகவே வெளிவரும் எனபதால், புதிய நபரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்தது.

unknown node

பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு ஒருவார காலம் துக்கம் கடைபிடிக்கப்பட்ட  நிலையில், அது முடிந்தவுடன் உயர்மட்டக்குழுவை கூட்டவும், அதைத் தொடர்ந்து பொதுக்குழுவை கூட்டவும் திமுக தலைமை முடிவு செய்தது.

இந்நிலையில் இன்று திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில்,பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திமுக பொதுக்குழுக் கூட்டம் மார்ச் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.