கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வர் யார்? – இன்று மாலை பாஜக ஆலோசனை!!

The BJP is scheduled to hold a consultation on who will be the new Chief Minister of Karnataka at 5 pm today.

கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது பற்றி இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.

கர்நாடகா மாநிலம் முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், வயது மூப்பின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்ததை தொடர்ந்து, நேற்று தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் தவார் சந்த்யை சந்தித்து வழங்கியிருந்தார்.

எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அடுத்து முதல்வர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதில் மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி, சி.டி.ரவி மற்றும் பிஎஸ் சந்தோஷ் உள்ளிட்டோரில் ஒருவர் கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது பற்றி இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மாலை நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.