முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்- தமிழக நிதியமைச்சர்..!

The Tamil Nadu Finance Minister said that a white paper will be issued on the activities of the previous regime.

முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தமிழக நிதியமைச்சர் தெரிவித்தார்.

இன்று காலை ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்ற நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். பின்னர், செய்தியாளரிடம் பேசிய அவர், நிதி தொடர்பாக முந்தைய அரசிடம்  கேட்க பத்து முக்கிய கேள்விகள் இருப்பதாகவும், அதற்கான பதில்களை பெற்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தமிழக நிதியமைச்சர் தெரிவித்தார். கடன்கள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது, எவ்வளவு வட்டி இதுவரை வழங்கப்பட்டது போன்ற விஷயங்கள் வெளியிடப்படும்.