விஜயகாந்தால் என்ன செய்ய முடிந்தது ?  அமைச்சர் பாஸ்கரன் கேள்வி

வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது, அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர்  என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்தார்.மேலும்

வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது, அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர்  என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்தார்.மேலும் சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி தொடங்கியுள்ளார் கமல் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது .விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்தார், அவரால் என்ன செய்ய முடிந்தது  என்று தெரிவித்துள்ளார்.