தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் – முதல்வர் பழனிசாமி பேச்சு

we should win the Assembly elections by a big margin and congregate here again after the victory" -CMO TamilNadu says

மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைத்து, அம்மாவிற்கு நன்றி கடன் செலுத்த, வீர சபதம் ஏற்போம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில்  முதலமைச்சர் பழனிசாமி  பேசுகையில்,அமைதிப்பூங்காவாக தமிழகம் வளர்ச்சிப்பாதையில் வெற்றிநடைப்போடுகிறது.தமிழக மக்களுக்கு தாயாக பணியாற்றியர் ஜெயலலிதா.பலரது குடும்பங்களின் காவல் தெய்வம் ஜெயலலிதா.தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம்; அதிமுகவின் வெற்றியை ஜெயலலிதாவுக்கு சமர்ப்பணம் செய்வோம் என்று பேசியுள்ளார்.