உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து,உபி, கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், உ.பி, கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் சந்தித்துள்ள நிலையில், ராகுல் காந்தி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் வென்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அனைத்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக எனது நன்றி. இதிலிருந்து பாடம் கற்று, இந்திய மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node