இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது !தமிழகத்தில் 6,26,74,446 வாக்காளர்கள்

Voter population of Tamil Nadu goes up to 6,26,74,446 and women voters continue to outnumber men-CEO Satyabrata Sahoo released t

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.ஆகவே ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்தது.கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.அதன்படி தமிழகத்தில்  மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6,26,74,446 என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,18,28,727 ஆகும்.ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,08,38,473 என்றும் மூன்றாம் பாலினத்தவர் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,246 என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.