வேலூர் திமுக எம்எல்ஏ;நடிகை குஷ்புக்கு கொரோனா தொற்றுஉறுதி

Vellore DMK MLA Karthikeyan; Actress Khushbu gets corona infection

வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் மற்றும் பாஜக நிர்வாகி குஷ்புவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.இதனால்,மாநிலம் முழுவதும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில்,வேலூர் திமுக எம்எல்ஏகார்த்திகேயன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இரண்டாவது அலையின்போது கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில்,தற்போது மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்,நடிகையும்,பாஜக தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளருமான குஷ்பு அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக,பாஜக பிரமுகர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“சரி.கடைசியாக 2 வது அலைகளைத் தடுத்த பிறகு,தற்போது கொரோனா எனக்கு வந்து விட்டது.நான் இப்போது நேர்மறை சோதனை செய்தேன்.எனக்கு running nose ஆக உள்ளது.என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.தனியாக இருப்பதை வெறுக்கிறேன். எனவே,அடுத்த 5 நாட்களுக்கு என்னை மகிழ்விக்கவும்.நீங்களும் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்”,என்று பதிவிட்டுள்ளார்.

unknown node