வேளச்சேரி மறுவாக்குப்பதிவு:நாளை மாலை வரை பிரச்சாரம் செய்யலாம் -தேர்தல் ஆணையம்

Velachery re-registration: Can campaign till tomorrow evening - Election Commission

வேளச்சேரி மறுவாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில்,நாளை மாலை வரை பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.சென்னை வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரம், ஒரு வி.வி.பேட் இயந்திரத்தை ஸ்கூட்டரில் வைத்து எடுத்து சென்றதை பார்த்த பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அந்த இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். அந்த விவிபேட் இயந்திரம், 50 நிமிடம் பயன்பாட்டில் இருந்தகாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

இதனால் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்நிலையில்  நாளை மாலை வரை பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.