வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு:144 தடை உத்தரவு பிறப்பித்த ஆட்சியர்!!

144 Prohibition order to prevent devotees from participating in Vaitheeswaran temple canopy ceremony due to corona spread.

கொரோனா பரவல் காரணமாக வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தடுக்க 144 தடை உத்தரவு.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பதை தடுக்க 144 தடை விதிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். கொரோனா விதிமுறைகளின்படி நாளை குடமுழுக்கு நடக்க உள்ள நிலையில், பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன் கோயில் பகுதிகளில் நாளை காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவை இணையம் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் பொதுமக்கள் பார்க்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது