சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் – இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

Tamil Nadu Chief Minister MK Stalin today launched a program to vaccinate minors.

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார்.

புதிய வகை வைரஸான ஓமைக்ரான் வைரஸ், உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் பாதிப்பை தடுக்கும் வண்ணம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான இணைய முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை ஜோன்ஸ் சாலையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைக்கிறார்.