12-14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் “பூஸ்டர் டோஸ்” நாளை மறுநாள் முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஏற்கனவே 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாளை மறுநாள் குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
unknown node