#BREAKING: ஒரு தொகுதியில் தனிச்சின்னம், மற்றொன்றில் உதயசூரியன்- ம.ம.க அறிவிப்பு..!

The Manithaneya Makkal Katchi has announced that it will contest in one constituency under the single symbol and in another with the rising sun symbol.

மனிதநேய மக்கள் கட்சி ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும், மற்றொன்றில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தேதி முதல் தொடங்கயுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 11 இடங்களை திமுக  ஒதுக்கியுள்ளது. அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும்,  மற்றொன்றில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதற்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதியிலும் தனி சின்னத்தில் போட்டியிடுவவதாக அறிவித்தது இருந்தது.

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.