இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்...!

The Union Cabinet meeting chaired by Prime Minister Modi is scheduled to take place at 1 pm today.

இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஆகஸ்ட் 13 ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் முதலே எதிர்க்கட்சிகள் பெகாஸஸ்  விவகாரத்தை கையிலெடுத்து அவைகளை முடக்கி வருகின்றன.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் மசோதாக்கள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.