தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் ட்வீட்...!

வெறும் திட்டமாக இல்லாமல் சமூக மாற்றத்திற்கான புரட்சியாக தொடங்கப்பட்டுள்ளது புதுமைப்பெண் திட்டம் என உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.

வெறும் திட்டமாக இல்லாமல் சமூக மாற்றத்திற்கான புரட்சியாக தொடங்கப்பட்டுள்ளது புதுமைப்பெண் திட்டம் என உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.

அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார்.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவர்.

இத்திட்டம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வெறும் திட்டமாக இல்லாமல் சமூக மாற்றத்திற்கான புரட்சியாக தொடங்கப்பட்டுள்ளது புதுமைப்பெண்திட்டம். பெண்ணுரிமை காத்த பெரியார் மண்ணில் அரசு பள்ளி மாணவிகளுக்காக, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை செயல்படுத்திய திராவிடமாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node