நிவாரணப் பொருட்களை திருடியதாக பாஜக தலைவர் மீது வழக்கு...!

Trinamool Congress has lodged a complaint with the police alleging that relief items were stolen by a BJP leader and his brother

புயல் நிவாரணப் பொருட்கள் திருட்டு.

மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்,நந்திகிராமம் தொகுதியில்,பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி,திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும்,மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதற்கிடையில்,கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் தாக்கியது.இதில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.இதனால், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும்,புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கு வங்க அரசும் தேவையான நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில்,மேற்கு வங்கம்,பர்பா மெதினிப்பூர் மாவட்டத்தில்,புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த நிவாரண பொருட்களை பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியும்,அவரது சகோதரரும் திருடி விட்டதாக திரிணாமல் காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும்,இது தொடர்பாக,சுவேந்து அதிகாரியிடம் விசாரணை நடத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.