புயல் நிவாரணப் பொருட்கள் திருட்டு. மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு. மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்,நந்திகிராமம் தொகுதியில்,பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி,திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும்,மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையில்,கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் தாக்கியது.இதில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.இதனால், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும்,புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கு வங்க […]