சசிகலாவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தான் டெல்லி பயணம்  -ஸ்டாலின்  

Tn CM Palanisamy Travel to Delhi to protect from Sasikala -Dravida Munnetra Kazhagam Leader: M. K. Stalin says

சசிகலா வெளியே வந்தவுடன் இந்த ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரிய போகிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சிமக்கள் கிராமசபைகூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில்,எல்லா மாநில அரசுகளும் அதை எதிர்க்கிறது. ஆனால் எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய இந்த மாநில அரசு அதை ஆதரிக்கிறது. இன்று கூட எடப்பாடி பழனிசாமி அவர்கள் டெல்லிக்கு சென்று இருக்கிறார்.

மோடி மற்றும் அமித் ஷாவை பார்த்திருக்கிறார்.விவசாய பிரச்சனைக்காகவா? நீட் பிரச்சினைக்காகவா? சசிகலா விடுதலையாகி வெளியே வரப் போகிறார். அவர் வந்துவிட்டார் என்றால் ஆபத்து வந்துவிடும். அந்த ஆபத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தான்.நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், நாம் 4 மாதம் கூட பொறுத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. சசிகலா வெளியே வந்தவுடன் இந்த ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரிய போகிறது என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.