எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் ! எதிர்ப்பு தெரிவித்து முறையீடு

An appeal has been lodged on behalf of the People's Justice Center in the Election Commission to set aside the torch light symbol

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்  டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

அண்மையில்  அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்தது.அதன்படி, தேர்தல் ஆணையம் புதுச்சேரியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு “டார்ச் லைட்” சின்னத்தை ஒதுக்கியது.ஆனால் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் எந்த சின்னமும் ஒதுக்கவில்லை. அதேநேரத்தில், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு “ டார்ச் லைட்” சின்னத்தை ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.தமிழகத்திற்கு சின்னம் ஒதுக்கப்படாத நிலையில்,டார்ச்லைட் சின்னத்தை போராடி பெறுவோம் என்று  கமல் தெரிவித்தார். தற்போது கமல்ஹாசன் முதற்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில்,பிரச்சார வாகனங்களில் இருந்துடார்ச்லைட் சின்னம் அகற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில்  டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  முறையீடு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.