நான் இன்று முதல்வராக இருக்கலாம் , நாளை நீங்களும் கூட ஆகலாம் – முதல்வர் பழனிசாமி பேச்சு

Today I am the CM Day after tomorrow anyone of you can become the CM -Chief Minister of Tamil Nadu Edappadi K. Palaniswami

சில புல்லுருவிகள் அ.தி.மு.க.வை வீழ்த்த நினைத்தன, அவர்களின் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், சில புல்லுருவிகள் அ.தி.மு.க.வை வீழ்த்த நினைத்தன, அவர்களின் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது. அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார்கள்.

இன்று நான் முதல்வராக இருக்கலாம்,பன்னீர்செல்வம் முதல்வராகலாம், நாளை நீங்களும் கூட ஆகலாம். இந்தியாவிலேயே தொண்டன் முதலமைச்சராகக் கூடிய ஒரே கட்சி அதிமுக மட்டும்தான்.பல அரசியல் கட்சியினர், எதிரிகள் கூட இன்று எம்.ஜி.ஆர் பெயரை தான் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று பேசியுள்ளார்,