விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

Those who give up will not be spoiled - Deputy Chief Minister O. Panneerselvam speech

ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை நடத்தி வருகிறார் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டிஅதிமுகசார்பில் கோவையில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பேசுகையில்,ஏழைகளுக்கு உதவி, தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது அதிமுக மட்டும்தான். சிலர் மற்றவர்களிடம் பிடுங்கி தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்.

விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும்.ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை நடத்தி வருகிறார்.பாஜக, அதிமுக கூட்டணி தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கியுள்ளது; கூட்டணி கட்சிகளாக இருந்த திமுக – காங்கிரஸ் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.