மோடி அரசின் சாதனைகளில் இதுவே மிகபெரியது – அமைச்சர் மனோ தங்கராஜ்

இது பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.

இது பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.

2017-2021 வரை 2,900-க்கும் மேற்பட்ட வகுப்புவாத & மதக்கலவர வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘2017-2021 வரை 2,900-க்கும் மேற்பட்ட வகுப்புவாத & மதக்கலவர வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மோடி அரசின் சாதனைகளில் இதுவே மிகபெரியது. இது பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி. எதற்காக இந்த உலகம் நம்மை வியந்து பார்க்கின்றதோ இல்லையோ இதற்காக நிச்சயம் வியந்து பார்க்கும்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node