ஹரிஜன் எனும் பொருள் அப்பாவின் பெயர் தெரியாதவர்கள் எனும் பொருளை தருவதால் அதனை குறிப்பிடக் கூடாது என 1982 ஆம் ஆண்டு இந்திய அரசு ஆணையிட்டது. ஆதலால் ஆளுநர் ஹரிஜன் எனும் வார்த்தை பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சென்னையில் மாணவர் விடுதியை திறந்து வைத்த தமிழக ஆளுநர் ரவி பேசுகையும் தமிழகத்தில் படிக்கும் பட்டியல் சமூகத்தை மாணவர்களை ‘ஹரிஜன்’ எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார். ஹரிஜன் எனும் வார்த்தை கடவுள் ஹரியின் குழந்தைகள் எனும் பொருளை தருவதால் அதனை குறிப்பிட்டு யாரையும் பேசக்கூடாது என குறிப்பிடப்பட்டு வருகிறது. ஆதலால் ஆளுநர் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹரிஜன் எனும் பொருள் அப்பாவின் பெயர் தெரியாதவர்கள் எனும் பொருளை தருவதால் அதனை குறிப்பிடக் கூடாது என 1982 ஆம் ஆண்டு இந்திய அரசு ஆணையிட்டது. என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும், திருமாவளவன் குறிப்பிடுகையில், உயர் பதவியில் இருக்கும் ஆளுநர் இவ்வாறு பேசுவதால் மற்றவர்களும் தயக்கமின்றி அந்த சொல்லை பயன்படுத்தக்கூடும். ஆதலால் ஆளுநர் பேசியது ஏன் என அவர் விளக்கம் அளிக்க வேண்டும். இட ஒதுக்கீடு பற்றி பேசியதை வரவேற்று பாராட்டுகிறோம். ஆனால் இங்கு தமிழில் ஆதிதிராவிடர் எனும் சொல்லிருக்கும்போது, திராவிடர் சொல்லை தவிர்க்க ஹரிஜன் சொல்லை குறிப்பிட்டு ஆளுநர் பேசியுள்ளாரா என சரமாரியாக அந்த அறிக்கை மூலம் கேள்வி எழுப்பி உள்ளார் திருமாவளவன்.
unknown node