இனிய நண்பரும், முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே, தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என் பிறந்தநாளுக்கு மேலும் வர்ணம் சேர்க்கிறது.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்
அந்தப் பதிவில், ‘இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் ‘கலைஞானி’ கமலஹாசன்அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்” என பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, கமலஹாசன் அவர்கள் முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘இனிய நண்பரும், முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களே, தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என் பிறந்தநாளுக்கு மேலும் வர்ணம் சேர்க்கிறது. அன்பும் நன்றியும்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node