#Breaking:நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டம் வாபஸ் – தமிழக அரசு அறிவிப்பு!

The Tamil Nadu government has announced that it is withdrawing its plan to set up the Nagai Petro-chemical Zone.

நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை வாபஸ்  பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் ஒன்றிய டெல்டா கிராமங்களை இணைத்து, பெட்ரோ – கெமிக்கல் மண்டலம் அமைக்க முன்னதாக தமிழக அரசு அனுமதி அளித்து,திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கியிருந்தது. ஆனால்,இதற்கு விவசாயிகள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,நாகை விவசாயிகள் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருந்த நிலையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் திட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்,ஒப்பந்தப்புள்ளி கோரியதை திரும்பப் பெறுவதாகவும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அறிவித்துள்ளன.