உள்ளாட்சி தேர்தல்:இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு – களத்தில் எத்தனை பேர் தெரியுமா?...!

The State Election Commission has now released the final list of candidates for the 9th District Local body Election.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதனையடுத்து,9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை நடைபெற்றது.மேலும்,ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்ததாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில்,9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி,இறுதியாக 23,998 பதவிமிடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

unknown node