சென்னை:மறைமுகத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து,மாநகராட்சி மேயர்,துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வருகின்ற மார்ச் 4 ஆம் […]
மறுவாக்குப் பதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பிறப்பிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தபட்டிருந்தன.இதனிடையே,பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதற்கான வாக்கு என்னும் பணிகள் நேற்று முடிவடைந்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில்,மறுவாக்குப் பதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பிறப்பிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,சென்னையில் 5,794 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக,அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி,ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர். மேலும்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர்களாக 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு,வருகின்ற பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து,அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்,சென்னை மாநகராட்சி உட்பட […]
தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.53,72,001 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது, பிப்.19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான தீவிர முன்னேற்பாடு பணிகளில் அரசியல் காட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.53,72,001 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று முதல் நாளில் 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. மேலும், சனிக்கிழமையான இன்று […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், சனிக்கிழமையான இன்றும் வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. மேலும், சனிக்கிழமையான இன்று அரசு அலுவலகங்களுக்கு வேலை […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஜனவரி இறுதிக்குள் முடிக்க வேண்டிய நிலையில் கூடுதல் நாட்களை அனுமதிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 4 மாதத்தில் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஜனவரி 27-க்குள் (அதாவது இன்று) தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை இன்னும் நடத்தி முடிக்கவில்லை. இந்நிலையில், 40 நாட்கள் கூடுதல் கால அவகாசம் கோரி தமிழக […]
சென்னை:தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு முன்னதாக மறுத்துவிட்ட நிலையில்,இது தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற […]
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், திமுக,அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும்,கொரோனா 3-வது அலை உச்சத்தில் உள்ள […]
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான மாநில தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியனது. மேலும்,கொரோனா 3-வது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. அதன்படி,அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு அரசியல் கட்சிகளுடனான தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்,தமிழகத்தில் உள்ள 21 […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பாணையை வருகின்ற 22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான வழக்கு வருகின்ற ஜன.24 ஆம் தேதி வர இருப்பதால்,ஜன.22 ஆம் தேதியே […]
விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 150 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் உள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சி, மாநகராட்சிகள் வார்டு எண்ணிக்கை நிர்ணயம், எல்லை வரையறை தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வாக்காளரின் படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் […]
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல். தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரையறை முடிந்ததால் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலானது கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றதையடுத்து,தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அதன்படி,அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய தேர்தல் ஆணையர், தற்போது மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் முதல்கட்ட தேர்தல் அக்.6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம்கட்ட தேர்தல் அக்.9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில், 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய […]
2 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி வரை 9.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தலானது கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவானது. இதனையடுத்து,9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று […]
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து,9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் […]