எம்.ஜி.ஆர். சிலைக்கு இன்று தமிழக அரசு சார்பில் மரியாதை!

The respect of the Tamil Nadu government today for MGR statue!

சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு இன்று அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,நடிகரும்,அதிமுக கட்சி நிறுவனருமான எம்.ஜி.ஆர்.அவர்களின் 105 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படவுள்ளது.இந்நிலையில்,எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி,சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்,அரசு உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.