முதல்வர் பதவி நிரந்தரமானது அல்ல. அப்பதவி ஸ்டாலினின் சொத்தும் அல்ல – ஆர்.பி.உதயகுமார்

யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். நாளை எடப்பாடி பழனிசாமி கூட முதல்வராகலாம் என ஆர்.பி.உதயகுமார் பேச்சு.

யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். நாளை எடப்பாடி பழனிசாமி கூட முதல்வராகலாம் என ஆர்.பி.உதயகுமார் பேச்சு.

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், முதல்வர் பதவி நிரந்தரமானது அல்ல. அப்பதவி ஸ்டாலினின் சொத்தும் அல்ல. யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். நாளை எடப்பாடி பழனிசாமி கூட முதல்வராகலாம்.

வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள முடியாமல் திமுக முடங்கி நிற்கிறது. ஆவின்பால் விலை உயர்வு மக்களை பாதிக்காது என பொய் சொல்கிறார் அமைச்சர் நாசர் என தெரிவித்துள்ளார்.

மேலும், மதுரை மாநகராட்சி நிர்வாகம் இன்று முடங்கி போய் கிடக்கிறது. இரண்டு நாட்கள் மழைக்கே மதுரை தத்தளித்துக் கொண்டிருக்கிறது இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விடுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.

முதல்வர் பதவி நிரந்தரமானது அல்ல. அப்பதவி ஸ்டாலினின் சொத்தும் அல்ல – ஆர்.பி.உதயகுமார்