ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பறிக்கொடுத்து விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்று உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பீட்டா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு கால அவகாசம் கேட்டிருப்பது கவலை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து, சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பறிக்கொடுத்து விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது […]
மதுரை அழகு சிறையில் தீ விபத்து ஏற்பட்ட பாட்டாசு ஆலையில் அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனிஷ் சேகர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையின் இன்று தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமானது. இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் காலையில் வேலை செய்து வந்துள்ளனர். அவர்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர். அதில் 5 பேர் படுகாயமுற்று தீவிர சிகிச்சையில் […]
நீர் மேலாண்மையில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என ஆர்.பி.உதயகுமார் குற்றசாட்டு. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் பருவமழையை மேற்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பருவமழையால் உயிரிழந்த 23 பேருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், வடகிழக்கு பருவ மழையால் உயிரிழந்த 23 பேருக்கு நிவாரணம் […]
யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். நாளை எடப்பாடி பழனிசாமி கூட முதல்வராகலாம் என ஆர்.பி.உதயகுமார் பேச்சு. மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், முதல்வர் பதவி நிரந்தரமானது அல்ல. அப்பதவி ஸ்டாலினின் சொத்தும் அல்ல. யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். நாளை எடப்பாடி பழனிசாமி கூட முதல்வராகலாம். வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள முடியாமல் திமுக முடங்கி நிற்கிறது. ஆவின் பால் விலை உயர்வு மக்களை பாதிக்காது என பொய் சொல்கிறார் அமைச்சர் நாசர் […]
பருவ மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என ஆர்.பி.உதயகுமார் குற்றசாட்டு. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை மழைநீர் வடிகால் திட்டம் அரைகுறையான திட்டமாக இருக்கின்றது; சென்னையில் பெய்த சிறிய மழைக்கே அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், வேலை ஓடுவதாக தெரியவில்லை. ஒரு சில இடங்களில் அவசர கதியில் மழைநீர் வடிகால் பணிகளை முடித்துள்ளார்கள்; சென்னையில் வடிகால் பணிகள் எந்த அளவிற்கு முடிந்துள்ளது என கேட்டால் 90% முடிந்துள்ளதாக கூறுகிறார்கள்.ஆனால் […]
கோவை சம்பவத்தில் முதல்வர் அவர்கள் மௌனம் கலைத்து பேச வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் பேட்டி. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் அரசின் மெத்தன போக்கினால் தான் மழை நீர் வடிகாலில் செய்தியாளர் விழுந்து இறந்துள்ளார். பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கோவை சம்பவம் குறித்து பேசியவர் கோவை சம்பவத்தில் முதல்வர் அவர்கள் மௌனம் கலைத்து பேச வேண்டும். […]
ஈபிஎஸ் சபாநாயகர் அப்பாவுக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளார் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தனர். இந்த நிலையில், இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் […]
மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வு ஆகியவற்றை மறைப்பதற்காகவே திமுக இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது, அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு காவல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு சொந்தமான 39 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறனர். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக தான் முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை […]
கலைஞர் நூலகம் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காட்டவில்லை என ஆர்.பி.உதயகுமார் குற்றசாட்டு. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி மதுரை திருமங்கலம் தொகுதியின் 10 முக்கிய பிரச்னைகள் அடங்கிய பட்டியலை அம்மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை காட்டி வாக்கு சேகரித்து வெற்றி பெற்ற திமுக, ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. முதலமைச்சர், கலைஞர் […]
சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் அறிக்கை. அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், […]
தீவிரவாதியைத் தேடுவது போல முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக அரசு கையாள்கிறது என்றும்,இது திமுக அரசின் காழ்ப்புணர்ச்சி செயல் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி,ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.ரவீந்திரன், விஜய் நல்லதம்பி என்பவர்கள் அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதியப்பட்டது. […]
வெங்காயத்தை உரிக்க உரிக்க தோல் தான் மிச்சமாக இருந்து, கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர உரித்துப் பார்த்தால் உள்ளே ஒன்றும் இல்லை என்பது போல தான் திமுக கூறியுள்ள 202 திட்டங்களும் மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் குறுவட்டத்தில் உள்ள 12 ஊராட்சிகளின் தேர்தல் தொடர்பான அதிமுகவினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு […]