#BREAKING: கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை..!

The hospital management has issued a statement saying that actor Kamal Haasan is in good health.

நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

unknown node