முதல் முறையாக மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரம் – தொடங்கி வைத்த உதயநிதி...!

The first human waste disposal machine - Udayanidhi started

முதல் முறையாக மனிதக் கழிவுகளை இயந்திரம் கொண்டு அகற்றும் முறையை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிப்பதாக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று,கடந்த மாதம் முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார்.

இந்நிலையில்,மனிதக் கழிவுகளை இயந்திரம் கொண்டு அகற்றும் முறையை தமிழகத்தில் முதல் முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அப்பகுதி எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார்.

மேலும்,இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம்”,என்று பதிவிட்டுள்ளார்.

unknown node