மக்களே...இன்று இதற்கு அனுமதி இல்லை – இந்து சமய அறநிலையத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

The Department of Hindu Religious Affairs has announced that worship and public feasting will not be allowed today

அண்ணா நினைவு நாளையொட்டி இன்று வழிபாடு மற்றும் பொது விருந்துக்கு அனுமதி இல்லை என்று  இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு  விடுத்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அண்ணா நினைவு நாளையொட்டி இன்று வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை என்று  இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதனால் கடந்த 26-ஆம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதாலும்,இன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வினை நடத்த அனுமதிக்க இயலாது என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

unknown node
மக்களே...இன்று இதற்கு அனுமதி இல்லை – இந்து சமய அறநிலையத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!