#Breaking:அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தம்..!

The counting of votes in Minister Vijayabaskar's constituency has been suspended due to a fault in the voting machine.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு இருப்பதால் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலை சட்டப்பேரவையின் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில், முதல் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அதாவது,முதல் சுற்றில் வைக்கப்பட்டுள்ள 14 வது மின்னணு இயந்திரத்தின் வெளியே உள்ள சீரியல் எண்ணில் தவறு இருப்பதால் அந்த இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ணுவதற்கு அணுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,தவறு உள்ள இயந்திரத்தின் வாக்குகளை பிறகு எண்ணிக்கொள்வதா அல்லது இரண்டாவது சுற்றைத் தொடங்குவதா என்ற  கருத்துகள் வரவே,வாக்கு எண்ணும் முகவர்களுக்கும்,வேட்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போதைய வாக்கு நிலவரப்படி,தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர் முன்னிலையில் உள்ளார்.