பாரம்பரியமும், பன்முகத்தன்மையும் கொண்ட நம் நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்று சேர்க்கிறது – பிரதமர்!

Prime Minister Modi has said that the Constitution of India unites our country with its tradition and diversity.

பாரம்பரியமும், பன்முகத்தன்மையும் கொண்ட நம் நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்று சேர்க்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், இன்றைய நாள் நாம் நாடாளுமன்றத்தை வழங்க வேண்டிய நாள். பல ஆலோசனைக்குப் பிறகு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய தலைவர்களுக்கு நாம் வணக்கம் தெரிவிக்க வேண்டிய நாளாக அரசியலமைப்பு தினம் உள்ளது.

இந்திய சுதந்திரத்துக்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கும் நான் வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் சாசனத்தை ஏற்படுத்திய இவர்களுக்கு நாடே முதன்மையாக இருந்தது. மேலும், நமது அரசியலமைப்பு பெரும் பாரம்பரியமும் பன்முகத் தன்மையும் கொண்டது. மேலும், நமது நாட்டை இந்திய அரசியல் அமைப்பு தான் ஒன்று படுத்துகிறது. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது என பிரதமர் பேசியுள்ளார்.