பாரம்பரியமும், பன்முகத்தன்மையும் கொண்ட நம் நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்று சேர்க்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், இன்றைய நாள் நாம் நாடாளுமன்றத்தை வழங்க வேண்டிய நாள். பல ஆலோசனைக்குப் பிறகு இந்திய அரசியலமைப்பு […]
நாடு முழுவதும் 29,185 மருத்துவப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் கூறியுள்ளார். இந்தியாவில் புதிதாக பல இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்ததை தொடர்ந்து புதிய மருத்துவ கல்லூரிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. தற்பொழுது மருத்துவத்துறையில் பல்வேறு முன்னேற்றங்களையும் இந்தியா கண்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவ படிப்புகள் குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், நாடு முழுவதிலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 29 […]
போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து நாட்டை பாதுகாத்து நாட்டைபாதுகாக்க வேண்டுமென்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில், போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிபர் மைத்ரிபால சிறிசேன, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தலையீடு மூலம் காவல்துறை உயரதிகாரிகள் இடமாற்றம் செய்வது தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறினார். அதிகாரிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தனிப்பட்ட முறையில் தம்மிடம் நேரடியாக தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டார்.