நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு நாளை வீட்டுமனை பட்டா வழங்குகிறார் முதல்வர் ...!

Chief Minister MK Stalin will hand over the housing bond to the people who will die tomorrow.

நாளை நரிக்குறவர் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீட்டுமனை பட்டா வழங்குகிறார்.

மாமல்லபுரத்திலுள்ள ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் நரிக்குறவ பெண் ஒருவருக்கு அன்னதானம் வழங்க மறுத்தது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், அமைச்சர் சேகர்பாபு அந்த பெண்ணுடன் அமர்ந்து கடந்த சில  தினங்களுக்கு முன்பாக கோவிலிலேயே அன்னதானம் சாப்பிட்டார்.

மேலும், இதன் தொடர்ச்சியாக மாமல்லபுரத்திலுள்ள பூஞ்சேரி கிராம அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வசிக்கக்கூடிய நரிக்குறவர் வசிப்பிடத்திற்கு தேவையான வசதிகள் கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 57 நரிக்குறவர்கள் 24 இருளர் என மொத்தம் 81 பேருக்கு இலவச வீட்டு பட்டா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டுமனை பட்டாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை வழங்க உள்ளார்.