சமூகத்தின் கண்ணியமான வாழ்க்கைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என முதல்வர் ட்விட். தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,’பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஏற்கனவே நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக கடிதம் எழுதி இருந்தேன். எங்களது தொடர் முயற்சியின் விளைவாக மக்களவையில் இதற்கான மசோதா குறிப்பிடத்தக்க […]
விருதுநகர் அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த நரிக்குறவ மக்கள். நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் இனத்தை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுப்பட்டிருந்த சமுதாயங்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது குறித்து […]
நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படும் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுப்பட்டிருந்த சமுதாயங்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. முன்னதாக நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு தற்போது […]
சமூக நீதி என்பது பெயரளவில் விளம்பரத்திற்காக இருந்தால் மட்டும் போதாது, அது செயல்பாட்டிலும் இருக்கவேண்டும் என அண்ணாமலை ட்வீட். சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் வாரக் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 சகோதர சகோதரிகளை இருக்கை இருந்தும் தரையில் அமர செய்ததாக நேற்று செய்திகள் வெளியானது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் […]
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆவடி அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்று நரிக்குறவ மாணவிகளுடன் கலந்துரையாடினர்.அதன்பின்னர் நரிக்குறவ மாணவி இல்லத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் நாட்டுக்கோழி குழம்புடன் இட்லி,வடை, உள்ளிட்ட காலை சிற்றுண்டி அருந்தினார்.மேலும் நரிக்குறவ மாணவிக்கு இட்லி ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.இதனைத் தொடர்ந்து,அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிலையில்,ஆவடியில் இருந்து சென்னை திரும்பும் வழியில் T1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திடீர் விசிட் மேற்கொண்டார்.அதன்பின்னர்,வழக்குகளின் பதிவேடுகள் , பொதுமக்களின் […]
நாளை நரிக்குறவர் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீட்டுமனை பட்டா வழங்குகிறார். மாமல்லபுரத்திலுள்ள ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் நரிக்குறவ பெண் ஒருவருக்கு அன்னதானம் வழங்க மறுத்தது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், அமைச்சர் சேகர்பாபு அந்த பெண்ணுடன் அமர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவிலிலேயே அன்னதானம் சாப்பிட்டார். மேலும், இதன் தொடர்ச்சியாக மாமல்லபுரத்திலுள்ள பூஞ்சேரி கிராம அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வசிக்கக்கூடிய நரிக்குறவர் வசிப்பிடத்திற்கு தேவையான வசதிகள் கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]