2-வது நாளான இன்றும் 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முதல் நாளான நேற்று 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 2-வது நாளான இன்றும் 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அறிவிப்புகள் நிலை, செயல்பாடு, தாமதத்திற்கான காரணம் குறித்து ஆலோசனை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.