சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ள தா.பாண்டியன் உடல்.!

The body of senior leader D. Pandian to be taken to his hometown Usilampatti.

சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ள மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த தா.பாண்டியன் உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இதையடுத்து இன்று இரவு சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது என கூறப்படுகிறது.

சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ள தா.பாண்டியன் உடல்.!