பாண்டியன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இந்திய […]
சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ள மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மறைந்த தா.பாண்டியன் உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் தா.பாண்டியன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய பொதுவாழ்வுக்கே மிகப்பெரிய இழப்பு […]
தா.பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.இந்நிலையில் அவரது மறைவு குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பெரியவர் தா.பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவர், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும், […]