#BREAKING : ஒற்றை தலைமை – அம்மாவுக்கு செய்யும் துரோகம் : ஓபிஎஸ்

ஒற்றை தலைமை பிரச்னை எதற்காக வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. கனவா, நனவா என்பது போல இருக்கு என பிரதமர் மோடி பேட்டி.

ஒற்றை தலைமை பிரச்னை எதற்காக வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. கனவா, நனவா என்பது போல இருக்கு என பிரதமர் மோடி பேட்டி.

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், இந்த ஒற்றை தலைமை பிரச்னை எதற்காக வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. கனவா, நனவா என்பது போல இருக்கு. பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன். பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது; அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது.

இரட்டை தலைமை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது; பொதுச்செயலாளர் பதவி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது; இதுகுறித்து தீர்மானம் போடப்பட்டுள்ளது; மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றால் அது ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய துரோகம்.

அதிமுக, தொண்டர்கள் இயக்கம்; தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். தொண்டர்களையும் என்னையும் பிரிக்க முடியாது; இந்த இயக்கத்தில் நான் இருப்பதே தொண்டர்களை காப்பாற்றுவதற்காகத்தான். தொண்டர்களையும் என்னையும் பிரிக்க முடியாது. ஜெயக்குமார் பேட்டியால்தான் ஒற்றைத் தலைமை பிரச்சனை பெரிதானது.

எந்தவித அதிகார ஆசையும் கொண்டவன் அல்ல. என்னை தொண்டர்களிடம் இருந்து ஓரங்கட்டவோ, பிரிக்கவோ முடியாது. ஒற்றைத் தலைமை குறித்து பேசியவர்களை கண்டிக்க வேண்டும்; கூட்டத்தில் நடந்ததை வெளியே வந்து பேசியது ஏன்? அனைத்தையும் நான் விட்டுக்கொடுத்தது தொண்டர்களுக்காக மட்டுமே. விட்டுக்கொடுத்தவன் கெட்டு போவதில்லை.

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறவேண்டும். அதிமுகவில் தற்பொழுது நடப்பது தனக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன். இருவரும் இணைந்தபோது எந்தப் பதவியையும் நான் கேட்டதில்லை.

டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும், நானும் இணைந்தோம். 2016ல் அதிமுக ஆட்சி பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் அரசை காப்பாற்ற வாக்களித்தோம். அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது; தமிழ்நாட்டில் வலுவான கட்சியாக அதிமுக உள்ளது.

பாஜக தங்களை எதிர்க்கட்சி என சொல்லிக்கொள்வது குறித்து கேட்ட பொழுது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எண்ணிக்கை அடிப்படையில் யார் எதிர்க்கட்சி என்பது தெளிவாக உள்ளது. சீமான்,அன்புமணி ராமதாஸ் கூட தான் எதிர் கட்சிகள் என சொல்லிக் கொள்கிறார்கள். சமூகமாக முடிவு எட்டப்படவேண்டும் என நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் , நீங்களும் வேண்டிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.