மேற்கு வங்கத்தில் இன்று தொடங்கிய 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு...!

The 6th phase of polling for 43 constituencies in West Bengal began today...!

மேற்கு வங்கத்தில் 43 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டத் தேர்தல் வாக்குபதிவானது இன்று தொடங்கிய நிலையில் மக்கள் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் மொத்தம் 8 கட்டங்களாக வாக்குபதிவு நடைபெறுகிறது.இதில் முதல் 5 கட்டங்களாக 180 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில்,இன்று காலை 6 ஆம் கட்டத் தேர்தல் வாக்குபதிவானது தொடங்கியுள்ளது.

இந்த 6 ஆம் கட்டத் தேர்தலில் 306 வேட்பாளர்கள் 43 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.மேலும்,14,480 வாக்குச்சாவடிகளில் 1 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தலில் கலவரங்கள் இல்லாமல் அமைதியாக நடைபெற மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 1,071 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,மீதமுள்ள 71 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.