நாடாளுமன்றத்தில் தமிழும் கொல்லப்படுகிறது; ஜனநாயகமும் கொல்லப்படுகிறது- வைகோ!

Tamils are being killed in parliament and democracy is being killed, said Madhimuga General Secretary Vaiko.

நாடாளுமன்றத்தில் தமிழும் கொல்லப்படுகிறது, ஜனநாயகமும் கொல்லப்படுகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலிருந்து முதல் நாளே மாநிலங்களவையை சேர்ந்த 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இந்த 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இது குறித்து பேசியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நாடாளுமன்றத்தில் தமிழும் கொல்லப்படுகிறது; ஜனநாயகமும் கொல்லப்படுகிறது. மீண்டும் 12 எம்பிக்களும் நாடாளுமன்றம் வரும் வரை எங்கள் போராட்டம் ஜனநாயக ரீதியாக தொடரும் என தெரிவித்துள்ளார்.