டெல்லிக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி ! இன்று பிரதமரை சந்திக்கிறார்

Tamilnadu Chief Minister Edappadi Palanisamy goes to Delhi! Meets the Prime Minister of India Narednra Modi today

இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.முதல்வர் பழனிசாமியுடன்,அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது.மேலும் முதலமைச்சர் பழனிசாமி இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலாவை சந்திக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.