இரண்டாவது நாளாக இன்றும்  கோவையில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம்

Tamilnadu Chief Minister Edappadi K. Palaniswami is touring Coimbatore district for the second day campaign today .

இரண்டாவது நாளாக இன்றும்  கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.இதனிடையே சட்டமன்ற தேர்தல் குறித்து ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று முதலமைச்சர் பழனிசாமி கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும்  கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.தொண்டாமுத்தூர் ,மேட்டுப்பாளையம் ,பெரிய நாயக்கன் பாளையம் ,துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நாளாக இன்றும்  கோவையில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம்