செய்தியாளர்கள் சந்திப்பில் கண் கலங்கிய தமிழிசை நெகிழ்ச்சி சம்பவம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் தமிழிசை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .

அப்பொழுது அவர்  ஒரே தேசம் ஒரே நாடுதான் என்ற எண்ணத்தில் தெலுங்கானா செல்கிறேன் என்றும் ஆண்டவனுக்கு ஆண்டு கொண்டிப்பவருக்கும் என் மனமார்ந்த நன்றி என தெரிவித்தார் .

என் மீது நம்பிக்கை கொண்டு இப்பொறுப்பை அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும்,அமித்ஷா ,தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார் அப்பொழுது அவர் எனது பெற்றோருக்கும் நன்றி என தெரிவிக்கையில் கண் கலங்கினார் .

பாஜகவின் அன்பான தொண்டர்களுக்காக தந்தையை விட்டுக்கொடுக்க நேரிட்டது வருத்தமளிப்பதாக கண் கலங்கியபடி கூறினார்.