தமிழக மக்களும், தொண்டர்களும் விரும்புபவர்களை அரசியலில் விரட்ட முடியாது – வி.கே.சசிகலா!

நான் அரசியலில் இருப்பதும், இல்லாமல் போவதும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் எடுக்கக்கூடிய முடிவு எனவும், தனிநபராக யாரும் என்னிடம் அதை சொல்ல முடியாது எனவும் வி

நான் அரசியலில் இருப்பதும், இல்லாமல் போவதும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் எடுக்கக்கூடிய முடிவு எனவும், தனிநபராக யாரும் என்னிடம் அதை சொல்ல முடியாது எனவும் வி கே சசிகலா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மக்கள் மற்றும் தொண்டர்கள் விரும்புபவர்களை அரசியலில் இருந்து விரட்ட முடியாது எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், அதிமுகவின் உடன்பிறப்புகளில் பெரும்பாலானோரின் ஆதரவு எனக்கு உள்ளதுடன், மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெற்றிபெறும் எனவும், நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாற்றம் வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.