தலைவர்களின் திருவுருவ சிலைகள் சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது என வி.கே.சசிகலா ட்வீட். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு வி.கே.சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்தியிருப்பது வெட்கக்கேடான செயல், இது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சமீப காலமாக, தலைவர்களின் திருவுருவ சிலைகள் சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. […]
நான் ஓபிஎஸ்-ஐ சந்திக்க உள்ளது பற்றி அவர் தான் கூற வேண்டும். என சசிகலா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருக்கும் தனது ஆதரவாளர்களை இன்று சசிகலா சென்னையில் உள்ள தனது வீட்டில் சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, செய்தியாளர்கள், ஓபிஎஸ்-ஐ எப்போது சந்திக்க உள்ளீர்கள் என்று கேட்டதற்கு, ‘ அதனை பற்றி அவர் தான் கூற வேண்டும். அதிமுகவில் பிரிந்தவர்கள் இரு அணி எல்லாம் ஒன்று தான். […]
மத்திய அரசிடம் கேட்டு பெற மாநில அரசுக்கு உரிமை உள்ளது. மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து மாநிலத்திற்கு தேவையானவற்றை கேட்டு பெற தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். – வி.கே.சசிகலா செய்தியாளர்களிடம் கூறினார். வி.கே.சசிகலா தற்போது செய்தியாளர்களை சந்தித்து, தற்போதைய தமிழக அரசியல் சூழல் பற்றிய தனது கருத்துக்களை பதிவிட்டார். அப்போது அவர்பேசுகையில், ‘ தேர்தல் நேரத்தில் மத்திய அரசை விமர்சிப்பது வேறு. அதன் பின்னர் நடக்கும் அரசாங்கம் வேறு. ‘ என கூறினார். மேலும், ‘ […]
மின் ஊழியர் ஒருவர், புகார் கொடுக்க வந்த நபரை மின் மோட்டார் கொண்டு தாக்க முயன்ற சம்பவத்திற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். காலை முதல் இணையத்தில் தமிழக அளவில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்ட வீடியோ என்றால், அது தர்மபுரி மாவட்ட பாலக்காடு பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டதை பற்றி புகார் கொடுக்க ஒரு பெண் வந்துள்ளார். அந்த பெண்ணை, மின் ஊழியர் குப்புராஜ் என்பவர் மின் மோட்டாரை கொண்டு தாக்க முயற்சித்த வீடியோ தான். அதன் பின் உடனடி […]
இபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றபோது அவர் ஓபிஎஸ்-யை நீக்கியது எவ்வாறு செல்லுபடியாகும் என சசிகலா பேச்சு. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டையில் திருமண விழாவில் பேசிய வி.கே.சசிகலா அவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது. சற்று நேரத்திற்கு முன்பு ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் ஒருவரை ஒருவர் […]
நான் அரசியலில் இருப்பதும், இல்லாமல் போவதும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் எடுக்கக்கூடிய முடிவு எனவும், தனிநபராக யாரும் என்னிடம் அதை சொல்ல முடியாது எனவும் வி கே சசிகலா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மக்கள் மற்றும் தொண்டர்கள் விரும்புபவர்களை அரசியலில் இருந்து விரட்ட முடியாது எனவும் கூறியுள்ளார். அத்துடன், அதிமுகவின் உடன்பிறப்புகளில் பெரும்பாலானோரின் ஆதரவு எனக்கு உள்ளதுடன், மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெற்றிபெறும் எனவும், நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாற்றம் வரும் எனவும் […]