மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சேவை வழங்கியதில் தமிழகம் முதலிடம் ...!

The President of the Republic has presented an award to Tamil Nadu for providing special services to the disabled.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சேவை வழங்கியதற்காக குடியரசு தலைவர் தமிழகத்திற்கு விருது வழங்கியுள்ளார்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில்2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்கிய விருதை தமிழ்நாடு சமூக நலம்- மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்.